தாய்ப்பாசம் ...

இரண்டு நாள்
வியாபார பிரயாணம்
முடித்து
வீடு திரும்பினேன் ...

"ஏங்க ஒரு போன் கூட
பன்னல ..? ஆமாம்
என்ன வாங்கிட்டு வந்தீங்க எனக்கு"??
இது மனைவி ...

"நீங்க இல்லாம ரொம்ப போர்.."
இது மகள் ...

"பயணமெல்லாம் சிரமமில்லாம
இருந்திச்சா...?? ஒழுங்கா
நேர நேரத்துக்கு சாப்பிட்டியா ...
வெந்நீர் போட்டுத்தாறேன் வந்து குளி
முதல்ல ..."
இது அம்மா

எழுதியவர் : அபிரேகா (18-Feb-13, 11:27 am)
சேர்த்தது : abirekha
பார்வை : 92

மேலே