எனக்கு நானே ஆறுதலாய்..
உன்னை நினைவுகளில் சுமந்து
கொண்டு என் கரங்கள் தீட்டிய
அழகான கோலங்கள் இன்று அழிய
கண்டேன் நீ வேறொரு பாவையின்
கரம் பற்றிய போது..
உன்னை சுமந்து கொண்டு
களிப்பில் வான் தூரலில்
துள்ளி குதித்த என் இதயம்
இன்று மழைச் சாரலில் துளியும்
சத்தமின்றி கண்ணீர் மல்க
கண்டேன் உன் இதயத்தில் எனக்கு
இடம் இல்லை என்று அறிந்ததும்..
உன்னை மட்டுமே தலைவனாய்
கொண்ட என் காதல் காவியங்கள்..
உன்னை கனவிலும் நினைக்க
மறந்ததில்லை நான்..
நீ எங்கே என்று கேட்கும்
என் இதயத்திடம் எப்படி சொல்வேன்
இப்போது நீ இன்னொருவளின்
காதலன் என்று...
சொல்லி அழ யாருமின்றி
எழுதுகிறேன் என் ஏக்கங்களையும்
வலிகளையும் கவிதைகளாய்..
ஆறுதலுக்காக எனக்கு நானே..