கடவுள் கடவுளாகிப்போனார் - 14

கடவுள் – 14

முதியவன் தோற்றம் தரித்து
கடவுள் முதியோர் இல்லத்தில்
அடைக்கலமானார்!
பணம்தான் குறையாக இருந்தது
அன்பும் பாசமும்
கொட்டிக் கிடைத்த
குடும்ப வாழ்க்கையில்
இன்று அனாதையாகக் கடவுள்!
பெற்றப் பிள்ளைகள்
கையில் பணம் இருக்கிறது என்பதற்காகப்
பெற்றோர்களை அனாதையாக்குவதா? என்றதற்கு
அங்கிருந்தவர்கள்
மகனைத் திட்டாதீர்கள் என்றார்கள்.
அவர்களுக்குப் பாடம்
கற்பிக்க வேண்டும் என்றார்.
அவர்கள்
“நாங்கள் படிக்க வைத்த
ஆங்கிலப் பாடமும் சரி இல்லை
அவர்களாகப் படித்தப் பாடமும்
சரி இல்லை” என்றார்கள்.
பிறகு தண்டிக்காமல் இருப்பதா?
விட்டுவிடுங்கள்… அவர்கள் தம் பிள்ளைகளுக்கு
நாங்கள் தராத கல்வியைத்தானே தருகிறார்கள்.
தாமதமாக அவர்களும் இங்கு வருபவர்கள்தான்!

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (19-Feb-13, 10:39 am)
பார்வை : 102

மேலே