ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை !!!
ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை !!!
தற்போது இணைய தளம் எங்கும் ஆயிரம் ரூபாய் காசு என்று ஒரு படம் வந்து கொண்டிருக்கின்றது, அந்த காசின் மற்றொரு புறம் அந்த படங்களில் காட்டப்படவில்லை ஆனால் அதன் மற்றொரு புறத்தில் தான் தமிழரின் பெருமை அடங்கியுள்ளது. இந்த காசு இனி தான் வரப்போவதாக செய்திகள் பரவுகின்றன, தற்போது வரை புழக்கத்தில் ஆயிரம் ரூபாய் காசுகள் விடப்படவில்லை ஆனால் சில சிறப்பு நிகழ்வுகளுக்காக ஆயிரம் ரூபாய் காசுகள் வெளியிடப்படுகின்றன..
ஆம் அந்த ஆயிரம் ரூபாய் காசு தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு நினைவாக சென்ற ஆண்டு புக்கிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் வெளியிடப்படுகிறது.
ஆயிரம் ரூபாய் காசு 35கிராம் எடை கொண்டதாகவும் 44 மிமி விட்டம் உடையதாகவும் ஆன வட்ட காசு ஆகும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. இந்த காசு 80% வெள்ளி மற்றும் 20% தாமிரம் கலந்து உருவாக்கப்பட்டது. இதே போன்று ஒரு 5 ரூபாய் காசும் வெளியிடப்பட்டது.
இந்த 1000 மற்றும் 5 ரூபாய் காசின் விலை ரூபாய் 4775, வெளிநாட்டுக்கு அனுப்ப $120 ஆகும்.
இந்த காசு பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது புக்கிங் செய்து தான் வாங்க வேண்டும், சற்றுமுன் செய்திகள். ஆனால் இதற்கான புக்கிங்க் தேதி சென்ற ஆண்டு 31.08.2012 அன்றே முடிந்துவிட்டது.
இம்மாதிரி சிறப்பு காசுகள் பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறியலாம் நண்பர்களே !!!
http://www.mumbaimint.இன்/