இப்புவி சொர்க்கம் தான் !!!!!!!!!!!!!!!!!!!!

இப்புவி சொர்க்கம் தான்
சாதி சண்டைகளுக்கு
சாவு மணி அடித்தால்!
வன்முறைகள்
வறண்டு போனால்!
நாகரிகத்தால் மனிதன்
நடை பிணம்
ஆகாவிட்டால் !
தீண்டாமை யார்
நெஞ்சையும்
தீண்டாமல் போனால்!
பணத்துக்காக செய்யும்
படு கொலைகள்
மறைந்து போனால் !
இப்புவி சொர்க்கம் தான்
மனிதன்
மனிதமுள்ளவனாக
வாழ்ந்தால் !!!