ஒவ்வொருவனும் உத்தமன் தான் .............

எறிகல்லும்
ஓவியம் தான்
சலனமில்லா நீரில் .......
உளறலும்
கவிதை தான்
மழலையின் இதழ்களில் .......
துக்கமும்
ரசனை தான்
ஓவியனின் தூரிகையில் ............
கலப்படமும்
அழகு தான்
கதம்ப மாலையில் .............
கதறலும்
தாய்மை தான்
பசுவின் அழைப்பில் ..................
உலகில் பிறந்த
ஒவ்வொருவனும்
உத்தமன் தான்
பிறந்த அந்த நொடியில்..................