என்னைப் பற்றி ...........
தனிமையே எனது
தார்மீகச் சொத்து !
விற்க நினைத்தேன்
வாங்க ஆளில்லை!
ஆழ்கடலே என் மனம் !
அதில்
நினைவலைகள் ஓய்வதில்லை !!!!!!!
என் சுற்றம்
மரம் ,செடி ,கொடி
வயல்வெளி .
எவை என்னிடம்
எதையும் எதிர் பார்ப்பதில்லை !!!
நானும் காதலிக்கிறேன் .
இயற்கையை !!!!!
எனக்கு இதில்
தோல்வியே கிடையாது .
நான் ஒரு சுதந்திரப் பறவை .
இருப்பினும் ஏராளமான
கட்டுப்பாடுகள் எனக்குள் !!!!!!!
நான் ......
தேடிப் பார்க்கும் முகங்கள்
திரும்பிக் கொள்கின்றன .
அனால் ......
எனக்குள் இருக்கும்
ஒருவன் என்னை
வரவேற்கிறான் .
நான் மனிதனை
நேசிக்கிறேன் !!!!
ஆனால்............
இதுவரை அவனைக்
கண்டதில்லை .