சுவைக்காத ஏக்கங்கள் -இயற்கையின் காதலி
முட்களையும் நேசிப்பேன் .
முத்தமிடுவேன்!
கடல் அலைகளோடு கவிதை
பேசுவேன் !
நிலவுக்குத் துணையாய்
மலை உச்சியில் நின்று
தவமிருப்பேன் !
விடிய விடிய உட்கார்ந்து
தாமரை மொட்டு
மலர்வதை இரகசியமாய்
படமெடுப்பேன் !
என் வீட்டு செல்லக் கிளிக்கு
தமிழ் மட்டுமே பேசக்
கற்றுக் கொடுப்பேன்!
அருவியைக் கொஞ்சம் நிற்கச்
சொல்லி என் வீட்டு
கொல்லையில் அதைச்
சற்று திருப்பி விடுவேன் .
புறாக்களோடு ஒரு நாள்
வான் உலா
சென்று வருவேன் !
இவை எதுவுமே நடவாது
எனும் போது இப்படியே
கவிதையாய் எழுதி
காகிதத்தை நிரப்பிக்
கொண்டு இருப்பேன் !!
வெறும் மனிதப் பிறவியாய்
பிறந்து விட்டதால் ...........