கலியுகம்...!

கலியுகம் கற்பலிப்புயுகமாய்
கடந்துகொண்டே வருகிறது
காரணம் கேட்டால்
கவர்மென்ட் சரியில்லை
என்கிறார்கள் ...

சற்று யோசியுங்கள்
உன்ன உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
இன்பமாய் வாழ பணம்

இவற்றையெல்லாம் தானே
தேர்ந்தெடுக்கிறோம்

தவறை மட்டும் அடுத்தவர் மீது
திணிப்பது சரியா ?
சிந்தியுங்கள் !

சிற்றின்ப பாவத்தை
சிறைப்படுத்துங்கள்

பேரின்ப ஒழுக்கத்தை
நடைமுறையாக்குங்கள்

நாடும் செழிக்கும்
நாமும் செழிப்போம் ...!

எழுதியவர் : ஹிஷாலீ (22-Feb-13, 4:28 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 104

மேலே