கொட்டு முரசே.....
அகிலம் அழிந்தாலும்
அன்பு அழியாது என்று
கொட்டு முரசே....!!!
ஆண்மை ஆதிக்கம்
அமைதி பெற
கொட்டு முரசே....!!!
இலங்கை தமிழர்களின்
இன்னல்கள் போக்க
கொட்டு முரசே....!!!
ஈனப்பிறவிகளின் காமவெறியால்
ஈக்களுக்கு இறையாகிய
இளம்பெண்கள் உடல்களின்
ஈமக்கடன் நிறைவுபெற
கொட்டு முரசே...!!!
உன்மையான உறவுகள்
உரிமை மீறாமல் பழக
கொட்டு முரசே....!!!
ஊனமுற்ற ஊழியனின்
ஊகம் உயர்ந்து ஓங்க
கொட்டு முரசே....!!!
எம்மக்கள் எண்ணங்கள்
என்றும் ஏற்றம் பெற
கொட்டு முரசே....!!!
ஏராளமாய் ஏவுகணைகள்
ஏற்றிய ஏன் நாடு
என்றும் ஏற்றம் பெற
கொட்டு முரசே....!!!
ஐம்புலன்கள் அடக்கி
ஐயமின்றி வாழ
கொட்டு முரசே...!!!
ஒற்றை ஆன்-பெண்ணின்
ஒரே உறவு ஒழுக்கம்
ஒழுங்குபெற
கொட்டு முரசே....!!!
ஓயாது உழைத்த சான்றோர்களை
ஓரத்திற்கு ஒதுக்காதிருக்க
கொட்டு முரசே....!!!
ஔவை சொன்ன வழிகளில்
ஒன்றுப்பட்டு வாழ
கொட்டு முரசே...!!!
அக் என்னும் எழுத்தில்
தமிழ் உயிர்கள் முற்று பெற்றாலும்
உலக உயிர்கள் முற்றுப்பெறாது
என்று
கொட்டு முரசே..!!!
கொட்டு முரசே....!!!
.