என் தமிழ்

உன்னுல் புதைந்துள்ள உயிர்சிற்பங்கள் ஏறாளம்.
உயிர்ப்பிக்கப்பட்ட சிற்ப்பங்கள் சில,
உறங்கிக்கொண்டிருக்கும் சிற்ப்பங்கள் பல,
உயிருற்ற சிலவற்றிலே இவ்வுலகம் வியக்கிறது.
உறங்கும் அனைத்தும் உயிர்பெற்றால் அண்டமே, அதிர்ந்துபோகும் உன் அருமைகண்டு.
எத்தனை பழமை உனக்கு அத்தனையும் அறியாமலே,
எத்தனை இனிமை இருக்கு.
எத்தனை தனித்தன்மை உனக்கு ஆராய்ந்தால்,
எத்தனை சிறப்புகள் இருக்கு.
செம்மொழியாகிய என் தாய்மொழி தமிழே!!!
இவ்வுலகில் உயர்ந்த்து உன்னை இன்றி வேறேதும் உண்டோ?
உலகம் உன் அருமைகண்டு வியப்பதோடல்லாமல்,
அழிக்கவும் நினைத்து தன் களை பதிக்கிறது.
வேறூன்றபார்க்கும் களைகலை வேரறுத்து-உன்னை
வெற்றி காணச்செய்யும் வரை தீராது-என்
வேகமும் உன் மீது நான் கொண்ட மோகமும்...

வாழ்க என் தமிழ்!!!
வளர்க என் தமிழ்!!!

தமிழன்
சுப.செந்தில்நாதன்
செங்கீரை

எழுதியவர் : சுப.செந்தில்நாதன், செங்க (23-Feb-13, 10:34 am)
பார்வை : 254

மேலே