தாய் தமிழ்மொழியே என் மூச்சு ..!
என்னை எழுத வைத்துக்கொண்டு இருப்பவளும்
தமிழ்மொழித்தாய்தான்...!
எண்ணங்களை கவிதையாக மாற்றுபவளும்
தமிழ்மொழித்தாய்தான்...!
நான் கவிதையை ரசிக்க கூட காரணம் ..
தமிழ்மொழித்தாய்தான்...!
அவள் தந்த அன்பாளே படைப்பாளியானேன்
அவள் தந்த அணைப்பாலே ரசிகனானேன் ...!
இளம்வயது காதலியும் அவள்தான் ...
என் முதுமை அம்மாவும் அவள்தான் ....!
நான் விரும்பும் உயிரினங்களும் அவள்தான்
நான் விளங்கிக்கொள்ளாத பிரபஞ்ச்சமும் அவள்தான் ......!
நான் வாழும் வாழ்க்கையும் தமிழ்மொழித்தாய்தான்...!
நான் இறுதியாக விடப்போகும் மூச்சும் தமிழ்மொழித்தாய்தான்...!