இயந்திரமாய் மாறிப்போன இந்தியர்களுக்கு....
இயந்திரமாய் மாறிப்போன இந்தியர்களுக்கு....
தானும் தன் குடும்பமும் என வாழ்ந்து வரும் என் நண்பர்களுக்கு இதோ ஒரு உண்மை....
இந்தியா விவசாய நாடு என மார்தட்டிக்கொண்டிருந்த நமக்கு, நம் நாட்டின் பிரதம மந்திரி மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் 60% மக்கள் விவசாயம் செய்வதாலேயே பொருளாதாரம் முன்னேறாமல் இருக்கிறது என பேசுகிறார் (நம்புங்கள். இவர் பொருளாதார மேதை தான்). ஆனால் இங்கே மறைக்கப்பட்ட ஒரு உண்மை உங்கள் பார்வைக்கு....
60% இந்தியர்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். இதில் விவசாயம் என்பது விளைவித்தலொடு நில்லாமல் அதன் துணைத் தொழில்களையும் அடக்கியது.
மற்ற 40% மக்கள் மட்டுமே மற்ற தொழில்களை சார்ந்திருக்கிறார்கள். இவற்றில் 15% தொழில்கள் ஏதேனும் ஒரு வகையில் விவசாயத்தோடு தொடர்பு கொண்டுள்ளன.
40 சதவிகிதமே உள்ள தொழிலதிபர்களின் பொருட்களுக்கு அதிகபட்ச விற்பனை விலை (MRP - Maximum Retail Price) வழங்குகின்ற அரசு, அவர்களின் தொழிலுக்கு காப்பூதியம் உட்பட அனைத்து சலுகைகளையும் வழங்குகிறது.
ஆனால் -
60% இந்தியர்கள் சார்ந்திருக்கும் விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP - Minimum Support Price) வழங்கிவருகிறது. ஆனால் அதே விளைபொருட்கள் சந்தைக்கு வரும் பொது குறைந்தபட்சம் 3 மடங்கு விலை உயர்வு பெறுகிறது.
உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்....
ஒரு குவிண்டால் ( 100 கிலோ) நெல் விவசாயிடம் இருந்து 1280 ரூபாய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால் அதே நெல் அரிசியாக மாற்றி சந்தையில் 4500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் அந்த நெல் விளைநிலத்திலிருந்து அரவை ஆலைக்கு (Rice Mill) கொண்டு செல்லப்பட்டு தோல் நீக்கப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. நெல்லை விளைவிக்கும் பணியோடு ஒப்பிடும் போது இங்கு 10% பணியே செய்யப்படுகிறது. ஆனால் விலை குறைந்தபட்சம் 3 மடங்கு உயர்த்தப்படுகிறது.
இதில் கொடுமை என்னவெனில் இந்த பாவத்தை இந்திய அரசாங்கமே செய்கிறது. நாம் ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய்க்கு விற்பனை ஆனால் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அந்த தக்காளியை விளைவிக்க ஒரு விவசாயிக்கு 7 ரூபாய் செலவாகிறது. இது தான் உண்மை.
ஒரு விவசாயிக்கு அவர் விளைவிக்கின்ற பொருளுக்கு விலை நிர்ணயிக்கின்ற அடிப்படை உரிமையை கூட தர இயலாத அரசாங்கத்தை தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசு என அழைத்து வருகிறோம்.
இந்நாட்டின் ஜனநாயகத்தை காக்கும் பணி நம் கைகளில் தான் இருக்கிறது. இன்றிலிருந்தாவது உறுதி ஏற்போம்.
நல்லதொரு அரசை நாமே படைப்போம்.