அவன் கதை
சோகம் என் வாழ்வின் நீங்காத ஓர் பாகம்,!!!
வேதனை தாங்குவதுதான் நான் செய்த சாதனை,
என் சிந்தை சிதறுகிறது,
தொழுவம் அவிழ்த்த காளைகளைப்போல்,!!!
கடமைகள் ஒன்றன் மேல் ஒன்றாக வீழ்ந்து
என் கனவுகளை கலைத்துப்போய்விட்டது,!!!
தந்தையின் சூதாட்ட வாழ்க்கை அதனால்,
என் தாய்படும் துன்பங்களும் துயரங்களும் கண்டு
என் கண்களும் வறண்ட பாலைவனமாயிற்று,!!!
சுற்றம் பேசும் கொச்சைவார்த்தைகள் கேட்டு,
என் இதயமும் இரும்புத் தூண்களாயிற்று,!!!
உறவுகளும் உதிர்ந்த இலைகளாகிட,
என் மனக்கிளைகளும் மாண்டு போயிற்று,!!!
கடவுள் கூட கல் சிலைதான் என் வாழ்வில்,
சிறு வயதில் எத்தனை துன்பங்கல் எனக்கு,?
நான் செய்த பாவங்கள் தான் என்னவோ?
பணவெறி பிடித்த மிருகங்கள் இடையே
மண்ணிலே பிறந்த நான் மனிதனாய் வாழ்வதாலா?
சுப.செந்தில் நாதன்
செங்கீரை