நீ என்னுடைய அப்பாவை அடி.நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன் !?

வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள்.

"இது நம்முடைய தகப்பனார்களுக்குத் தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே?''என்றான் ஒருவன்.

''அதனாலென்ன,நாம் அவர்களைத் திரும்பி அடித்தால் போயிற்று.''என்றான் மற்றவன்.

''நாம் அவ்வாறு செய்ய முடியாதே.ஏனெனில் உன் தகப்பனையும்,தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?''என்றான் முதல்வன்.

''சரி,அப்படியானால் ஒன்று செய்வோம்.நீ என்னுடைய அப்பாவை அடி.நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்.''என்றான் மற்றவன்.

எழுதியவர் : எனக்கு பிடித்தது (25-Feb-13, 1:16 pm)
பார்வை : 457

சிறந்த நகைச்சுவைகள்

மேலே