குறும்பு மாணவர்கள் ..!

ஆசிரியர் : குட் மோனிங் பிள்ளைகள் ..!
இன்று நாங்கள் காட்டு மிருகங்கள் பற்றி படிக்கப்போகிறோம் ...சரியா .?
மாணவர்கள் :ஆமாம் சார்...
ஆசிரியர் : ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
ரமேஸ் : யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
ரமேஸ் : இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
*********************************************
ஆசிரியர் : சுரேஷ் இமயமலை ..எங்கே இருக்கிறது
சொல்லுபார்கலாம் ...?
சுரேஷ் : தெரியாது சார் .....!
ஆசிரியர் : உனக்கு எப்ப அதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும் ...
ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!
சுரேஷ் : மேசைமேல் ஏறிநிண்ட சுரேஸ் ..சார்
இதுல நிண்டு பார்த்தா தெரியுமா சார் ....?
ஆசிரியர்; ??????
****************************
ஆசிரியர் : +1 மாணவருக்கு புவிசரிதவியல் கற்பித்து விட்டு மாணவர்களை பார்த்து சொன்னார் ...! உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தா கேளுங்கள் ...?
மாணவன் : சார் நீங்க படிப்பித்த அரசியல் பாடம்
புரியல்ல சார் ...!
ஆசிரியர் : நான் எங்கடா அரசியல் கற்பித்தேன்
முழித்துக்கொண்டிருந்தார் ...?