எங்கே போனாய் ....... !!!!!!!!!!!!!!!!!!

அன்பை அறிய வைத்து
ஆருயிரை எனக்கு தந்து
இசையில் மூழ்க வைத்து
ஈட்டியாய் மனதில் பதிந்து
உண்மையை மறைக்க வைத்து
ஊஞ்சல் மனதை கட்டி அணைத்து
என் பெண்மையை உணர வைத்து
ஏகாந்த இரவு என்னக்காக தந்து
ஐயத்தை உன்னிடம் மறைக்க வைத்து
ஒன்பது கோளையும் விழியில் பார்க்க வைத்து
ஒளவையின் தமிழை ரசிக்க வைத்து
என்னை மட்டும் தவிக்க விட்டு
எங்கே போனாய்..................!!!!!!!!
மௌனராகம் உணர வைத்து விட்டு
எங்கே போனாய்..................!!!!!!!!
காத்திருப்பேன் உனக்காக
எதிர் பார்த்திருப்பேன் என் கைபேசியில்
உன் பெயரில் வரும் சினுங்கலுக்காக..................!!!!!!!!