தேவனின் திருமகன்

பாவிகளுக்காக சிலுவை சுமந்தவர்
மானிடப் பிறவியல்ல
அவர் தேவனின் திருமகன்
இது காட்டிக்கொடுத்த
யூதாசிற்கும் தெரியவில்லை
கொடிய கட்டளையிட்ட
பிலாத்திற்கும் தெரியவில்லை
கல்லெடுத்தெறிந்த
மக்களுக்கும் தெரியவில்லை
முள்முடி வைத்து ஆணியடித்த
காவலருக்கும் இது தெரியவில்லை
உயிர்த்தெழும் போது
உணர்வர் அனைவரும் - அவர்
பிறப்பின் இரகசியம் என்னவென்று

எழுதியவர் : மோகன் சபாபதி (28-Feb-13, 1:30 pm)
சேர்த்தது : Mohan Sabapathy
பார்வை : 75

மேலே