iraivanidam request III
வாழ்கின்ற நாட்களில் வளமான சிந்தனையால்
வாழ்நாள் செழித்தல் வேண்டும்
வற்றாத ஜீவநதி வட கங்கை ஆற்றினைப் போல்
வளமான உள்ளம் வேண்டும்
விழ்கின்ற எண்ணங்கள் வீணான கிளைஎன்று
வெட்டியே எறிதல் வேண்டும்
வெஞ்சமர் புரிகின்ற வீரத்தமிழரின்
வெற்றி உள்ளம் என்றும் வேண்டும்