வான்வெளி அழகி

ஆகா! என்ன இது
மேகங்கள் உரசி
இடி முழங்குகிறது!
ஒலியை தாண்டி ஒளியானது
வெளிச்சம் பரப்புகிறது !
மழையானது துளியால்
முத்துகளை தூவுகிறது !
மயில்கள் நடன
அரங்கேற்றம் நடத்துகிறது!
வானவெளி ஊதா நிற
பட்டு கம்பளம் விரிக்க !
கிரீடம் தரிக்க ஏழு வண்ண
ஆடையில் உலா வரும்
அழகு பதுமையே !
"வானவெளி அழகி " எனும்
வாகை சூடிய வானவில்லே !

எழுதியவர் : swema (1-Mar-13, 12:40 pm)
சேர்த்தது : swema
பார்வை : 107

மேலே