காதல் வலி
காதலியே…
என் வாழ்க்கையின் சந்தோசம்
நம் காதல் என்றிருந்தேன்
உன்னையும்,
உன் அழகினையும் ரசித்தேன்
உன் செயல்களை
நினைத்து தினம் தினம் மகிழ்ந்தேன்
நீயும் என்னைப் போன்றுதான் என
உன்னையே நம்பினேன்
ஆனால்?
நீயோ... உன் வீட்டில் பார்த்த
மாப்பிள்ளையை
மணம் செய்துகொள்ள போகிறேனென்கிறாய்.
நம் காதலின் முடிவு
தோல்விதானா?
எனக்கேன் தெரியாமல் போனது
பொதுவாக காதலிக்கும் பெண்களின்
முடிவு இதுதானென்று...
நம் காதலை எப்படி மறந்தாய்?
என்னால்
உன்னை மறக்க முடியவில்லையே...
உன் நினைவுகள்
என்னை விட்டு விலக மறுக்கிறது
நித்திரையும் வர மறுக்கிறது
உடலும் இயங்க மறுக்கிறது
மகிழ்ச்சியும் வர மறுக்கிறது.
உன்னால்...
நான் மட்டும் உணர்கிறேன்
நம் காதல் வலியை...