பேரழகு தேவதையே...

உந்தன் அழகினை பார்க்கும்
அழகிய மலர்களும் வெட்கி தலைகுனியுமடி

உன் அழகை வர்ணித்து எழுத
கவிஞர்களின் கூட்டம் கூடுமடி

உன் அழகினை காணும் புயல் காற்றும்
உன் மீது தென்றலாய் காற்று வீசி வரவேற்குமடி

பேரழகியே... தயவு செய்து
தலை குனிந்து பூமியை பார்த்துவிடாதே
ஏனெனில்,
உன் அழகினை பார்த்து வியக்கும்
பூமியும் சுற்ற மறுக்குமடி

உன் குர‌லை கேட்டால் குயிலும்
உன்னிட‌ம் ம‌ன்னிப்புகோரும‌டி

உன் மெல்லிய‌ உடை, அழ‌கிய‌ நடை
ம‌ல‌ர்க‌ள் சூழ்ந்துள்ள ஜடை
பார்ப்ப‌த‌ர்க்கு கிள‌ம்புமே ஆண்வ‌ர்க்க‌த்தின் ப‌டை
அத‌ற்கு நீ த‌டை போடாத‌டி

உன் கூந்த‌ல் இருளையும்
வெள்ளும் க‌ருமையடி

உன் ப‌ல் நில‌வையும்
வெள்ளும் வெண்மைய‌டி

தேவதையே... உன்னை முழுமையாய்
பார்த்து ரசிப்பதர்க்கே ஓராண்டு வேண்டுமடி

உன் சிரிப்பொன்றே
நான் பல்லாண்டு வாழ‌ போதும‌டி.

உந்த‌ன் மெளன‌த்திலும்
ஆயிர‌ம் வார்த்தைக‌ள் உள்ள‌த‌டி

பேர‌ழகு ப‌துமையே...
நீ என‌க்கு மட்டும் சொந்த‌ம‌டி

பேர‌ழ‌கு தேவ‌தையே...
உன்னை காத‌லித்த‌
என் க‌தி என்ன‌டி?

எழுதியவர் : க‌. அசோக்குமார் (20-Nov-10, 10:40 am)
சேர்த்தது : க‌.அசோக்குமார்
பார்வை : 464

மேலே