உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
கையும் காலும் மரப்பது போல
மனசும் மரத்துப் போச்சா?
ஏழையை உலகம் மறப்பது போல
நீயும் மறந்தா ஆச்சா?
உனை நம்பியே வாழ்கிறேன் - நான்
உறங்காமலே வீழ்கிறேன்
நெசமா நெசமா இது நெசமா?
மனசா மாறும் ஒரு விஷமா?
முழுசா மறந்தா தப்பில்லையா?
நானும் உனக்கு ஒப்பில்லையா?
மனசது மனசது பாரமடி
உன் நினைவில் நான் வாழ்க்கையின் ஓரமடி
சுமந்தேன் நெனப்ப மனசுக்குள்ள
கனம் தாங்காமல் அழுதேன் என்ன சொல்ல
நீ கொஞ்சம் சிரித்தால் போதுமடி
அதில் சுமைதான் குறையும் நான் பேதையடி
உன் நினைவு புயலின் தாக்கத்திலே
நான் பலநாள் தொலைத்தேன் தூக்கத்தையே
நான் விலகிச் செல்லும் போதெல்லாம்
துரத்தி வந்தாய் அது யார் குற்றம்?
நான் விருப்பம் சொல்லும் நேரத்தில்
என்னை மறக்கச் சொல்வது பெருங்குற்றம்
மறப்பதும் வெறுப்பதும் உன் விருப்பம்
என்னை மறந்தென்ன சாதித்தாய்..?
விலகிச் செல்வதும் உன் விருப்பம்
எனக்கேன் தனிமையை போதித்தாய்...?