பிரிவு
என்னவளே! நீ இல்லா இந்நாட்களில்,
பரிவு இல்லா பிரிவு என் நினைவுகளை பிளிவதும்,
பின் அது என் கண்ணீரால் தன் தாகம் தீர்ப்பதும்
வாடிக்கையாகிப் போனதடி.
பொன் நிலவே! நீ தந்த இக்கொடிய பிரிவால்,
காதலி உன்னை கடிகிறேன், நம் உண்மை
நினைவுகளை களைய துடிக்கிறேன்.
என் வெண்ணிலவே! வெறுமையான வாழ்வை
என் சொந்தமாக்கி, பிரிவு எனும் பேயைய்
உன் நினைவாக தந்த என் பூங்கொடியே!
உன் மடியில் மயங்கி காதல் கொண்ட
காலம் அறுந்து, மதுவின் மடியில்
மயங்கி தூங்கும் என்னை,
இப்பிரிவு தன் தலையில் வைத்து,
தக திமி ஆட்டம் ஆடுதடி!
தள்ளாடும் என் வாழ்வை கண்டு,
கொண்டாட்டம் போடுதடி!
வரது...