எனக்காக என்பதால்..!

உன்னுடைய
அழுகையும் அழகாய்
தான் இருந்தது:
அழுதது
எனக்காக என்பதால்..!

என் முடிவிற்கு
எதிராக நீ பேசினாலும்,
பிடித்துப்போனது:
நீ யோசித்தது -
எனக்காக என்பதால்..!

காத்திருந்து - கலைத்து
எனைக் கடிந்த தருணங்கள்
சுகமாய் தோன்றின:
காத்திருந்தது
எனக்காக என்பதால்..!

நீ - கொடுக்கும்
இந்த முத்தமும்
எனக்குப் பிடிக்கிறது:
கொடுப்பது
என் கல்லறையில் என்பதால்..!

எழுதியவர் : Madhan... (4-Mar-13, 12:13 am)
பார்வை : 248

மேலே