அவள் மட்டும் தான்
உன் மார்போடு நான் கண்ட நெருக்கம்....
என் மரணம் வரையிலும் இருக்கும்....!
உன் மடி மீது நான் கொண்ட உறக்கம்....
எந்த மெத்தைகளில் இனி பிறக்கும்.....?
உன் கை வழி நான் உண்ட அமுதம்...
இந்த கடைகள் எங்கனம் அளிக்கும்...?
அடித்தாலும் அணைக்கும் பாசம்...
உனையன்றி யார் தர முயலும்...?
விலையில்லா உனது நேசம்...
எவ்வுறவால் நிரப்ப இயலும்.....?
என் ஆதி முதல் அந்தம் வரை உன் அன்பின் வாசம்........
வாடாத மலராய் என் வாழ்வில் வீசும்........!
இனி ஒரு முறை இவ்வுலகில் நாம் பிறந்தால்....
உனை கைகளில் ஏந்தும் தாயாக நானாக வேண்டும்.....!