மறையுமோ சாதிக்கொடுமைகள்

மனிதனின் குருதியின் நிறம் ஒன்று
வேற்றுமையின் வடிவமோ பலவுண்டு
ஏற்றமும் தாழ்வும் வகைப்படுத்தி
மனிதன் வாழ்கிறான் மிகைப்படுத்தி
பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து
உணர்வுடன் உயிரை வதைச் செய்து
என்ன சுகம் நீவீர் காண்பீரோ
இரத்த வாடையில் குளிர் காய்வீரோ
சாதி மனதை தீக்கரையாக்குது
சகமனிதனின் வாழ்வை சீரழிக்குது
வன்கொடுமையை தொடுக்கின்றான்
வாழும் உரிமையை கெடுகின்றான்
எரிவது உடமைகள் மட்டுமல்ல
சாதியக் கொடுமையின் உருவமும் தான்
எத்தனை வடிவம் பெரியார் எடுத்தாலும்
சாதிக்கொடுமைகள் இங்கு மறையாதோ….