கொடுமையடா…கொடுமை…!

கொடுமையடா…கொடுமை…!
``````````````````````````````````````````
இறந்த தமிழர்களின் பாதகக்
கொடுமைகளைவிட இன்று
வாழும் தமிழர்களின் நிலையே
பரிதாபமாக உள்ளது.
தமிழனின் தலை எழுத்தை
சிங்களன் எழுதுகிறான்
கொடுமையடா கொடுமை
வளரும் பிஞ்சுகளை அஞ்சி
வாடி நிற்கும் காட்சிதனை
காணும் போது….
உள்ளம் நொந்து சாகிறது
நேசத்தை பாத்திக்கட்டி
பாசத்தால் நீர் பாய்ச்சி
பண்புடனே உயிர் வளர –என்றும்
மாண்பு கொண்ட தமிழினத்தை
காலம்…..
காக்கா வலிப்புள்ளவனிடம்
கூர் வாளை தந்ததைப்போல்
சிங்கள கூட்டம்…
சிந்தித்துப் பார்க்காமல்
சிதறு தேங்காய் போல் தமிழனை
சூறை விடுகிறானே…
சூன்யத்தால் பிறந்த சிங்கள
கூட்டமே….
சிந்திக்க தெரியாத சவளைநாய் தோற்றமே..!
பாவிகளே…
பாசத்தோடு உன் தாயிடம் பசிதீர
பால் அருந்தியதுண்டா..?
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்
வாடினேன், என்று வருந்தி வாழ்ந்த
தவ சீலர்களின் வம்சமடா…நாங்கள்,
ஜீவகாருண்யத்தை வேருன்றிய
வாரிசுகளடா நாங்கள்…
வாழத் தெரியாத வெளவால் கூட்டமே…
எங்கே தான் நீங்கள் ஏறி நிலைத்தாலும் முடிவில் தலைகீழ் தான் உங்கள் ஆட்டமே…
அமைதியான எம் தமிழினம் ஆர்பரிக்கும் கடலென…
புயலாய் மாறி புறப்படும் காலம் கண்ணிமைக்கும் தூரத்தில்…
அதுவரை, மண் புழுவாய் மாரடித்து
கொள்ளுங்கள்…

எழுதியவர் : Anbuselvan (5-Mar-13, 2:54 am)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 112

மேலே