அன்பிலே வாழ்ந்திடு
நினைவாலே  சிலை  செய்து 
கற்பனைச்   சிறகாலே 
உயிரை உயிர்ப்பித்து 
பொல்லாத பொருள் ஆசைகளைத் துறந்திடு 
வாழ்வு முடியும் வரை ...!
மனமெனும் குரங்கை ஆட்டிப் படைக்கும் 
மனச் சிந்தனைக்கு ஆட்படாமல் 
கட்டுப்பாட்டைச் சமைத்திடு ....!
ஆன்மிகம் போற்றும் உன்னை 
மனதிலும் உள்ள ஒழுக்கத்திலும் 
முயற்சி எனும் மருந்தைக் கலந்திடு 
நன்னெறிப் பாதையிலே...!
தூய்மை எனும் அங்குசத்தால் 
அறியாமை சஞ்சலம் பொறமை சோம்பல் 
எனும் நச்சுச் செடிகளை எல்லாம்
வேரோடு அறுத்து எறிந்திடு 
நற்சிந்தனை நதியாலே....!
காலம் உன்னை கை விட்டாலும் 
காலனிடம் வாக்குவாதம் செய்து 
காலக் குப்தனிடம் வாய்தா வாங்கி
வாழ்க்கைச் சிறகை அன்பாலே 
வாழ்ந்துவிடத் துடித்திடு 
புத்தி எனும் தங்க ரதத்தினாலெ ...!
உனைத்  தேடி வருவான் 
மனத்தின் ஆற்றலாக உருவெடுத்தே
பணிந்து மகிழ்ந்து கருவியாகிடுவான் 
கடவுள் உன் முன்னே...!
நீரை நீரிலும் 
தீயைத் தீயிலும் 
காற்றைக் காற்றிலும் 
மனதை ஆளும் மனமாகவே
தூய விழிப்புணர்வோடு 
ஒடுக்கியே வாழ்ந்திடு மனிதா ...!
 
                    
