காதல் விட்டு போகும்போது ??????????
அழகு செல்லம் தங்கம் என
அள்ளிகொண்ட நெஞ்சம்
காதல் விட்டு போகும்போது
உயிரை கிள்ளி எறிய தோணும்
இனிக்கும் வார்த்தை பேசி
இணைந்து சுற்றும் போது
காதல் கசக்க வில்லை
கால்கள் தரையை தொட்டதில்லை
தேவை முடிந்த பின்னே
முகம் சுளிக்கும் பெண்ணே
எனக்குள்ள குறையை சொல்ல
நீ தேடாத வார்த்தை இல்ல
கண்ணீர் தவிர எதுவும் காதல்
முடிவாய் கண்டதில்லை
காதலில் தோற்ற எந்த பெண்ணும்
தாடி வச்சதில்லை
காதலை குற்றம் சொல்ல
எல்லா காதலும் இல்ல
பொய்யான காதல் மட்டும்
உணந்தவர்க்கு புத்திக்கு எட்டும்