தழுவலில்

அன்னையின் தழுவலில்
அன்பு பிறந்தது!
அய்யனின் தழுவலில்
அறிவு பிறந்தது !
கன்னியின் தழுவலில்
கவிதை மலர்ந்தது !
காற்றின் தழுவலில்
உறக்கம் வந்தது !
குழந்தையின் தழுவலில்
சொர்க்கம் தெரிந்தது !
நட்பின் தழுவலில்
நண்பன் கிடைப்பான் !
நண்பனின் தழுவலில்
நல்லவை நடக்கும் !
மறதியின் தழுவலில்
மன்னிப்பு தெரிந்தது !
பொய்யின் தழுவலில்
கலகம் பிறக்குது !
உண்மையின் தழுவலில்
உலகம் நிமிர்கிறது !
தழுவல் இல்லா மனங்கள்
தடத்தை தொலைத்து நிற்கும்!
தழுவல் தேடும் பொது...
தலைகள் நிமிர்ந்து நிற்கும்!