மெழுகுவர்த்திகள்

விழுதுகள் உள்ளவரை
விளையாடிவிட்டு
வீணர்களால் -வெட்டப்பட்ட
ஆலமரங்கள் .

பணம் என்ற பலம்
அற்றுப்போனதால்
அன்பென்ற ஆணிவேர்
அறுக்கப்பட்டவர்கள்.

நாணல்கள் தழைத்திட
நாற்புறமும் அரணிட்டு
ஈற்றில் ..
வாய்ச்சொல் என்ற
தீச்சொல்லுக்கு இரையாகி
வெந்து.நொந்து போனவர்கள் .

வாலிபம் வாழ்க்கைக்கு
என்றின்றி
வாழ்க்கையையே வாலிபத்தில்
தொலைத்துவிட்டும்
அர்த்தமின்றிப்போனவர்கள் .

கடவுள் தரிசனம் கூட
காசால் வகுக்கப்படும்போது
கருணைக்காய் ஏங்கிநிட்கும்
காலாவதியைப் போனவர்கள் .

முன்னேறும் முயற்சியில்
சமுதாயத்தோடு முரண்பட்டு
மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்து போய்
மூலையில் முடுக்கப்பட்டவர்கள் .

மேடைப்பேச்சுகளில்
பெற்றோரைப்பேணுங்கள்என
சங்கொலி போல் முழங்கும்
நல்லோரைப்பெற்றவர்கள் .

வேலைக்குப்போனால்
கவனிக்க ஆள் இல்லையென
கருணை இல்லத்தில்
சேர்க்கப்பட்டவர்கள்

வேலைக்குப்போனால்
கவனிக்க ஆள் இல்லையென
கருணை இல்லத்தில்
சேர்க்கப்பட்டவர்கள்

முதியோர் இல்லத்தில்
எட்டிவரும் கண்ணீரோடும்
முட்டி வரும் விசும்பலோடும்
நாளைய விடியலிலாவது
என் மகன்எனை அழைத்திட
வருவானா ?எனப்பிரார்த்தித்து
கண்ணீரோடு கண்ணயரும்
கண்களுக்கு சொந்தமானவர்கள் .

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (6-Mar-13, 3:16 pm)
பார்வை : 104

மேலே