வெனிசுலா அதிபர் மற்றும் புரட்சியாளன் ஹுயுகோ சாவேஸ் மரணம்....!

வெனிசுலா அதிபர் மற்றும் புரட்சியாளன் ஹுயுகோ சாவேஸ் மரணம்....!

அதெப்படி லத்தின் அமெரிக்க நாட்டின் அதிபர்களுக்கு மட்டும் புற்று நோய் வருகிறது...எனவே இது ஒரு ' பயோ வார் ' தான்...சாவேஸ்..!

ஐ.நா.கூட்டம் ஒன்றில் இவ்வாறு கூறினார்....அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த உலகத்தின் மிகபெரும் சாத்தான் - சாவேஸ்

வளைகுடா போருக்குப் பின் சதாம் உசேன் - ஐ சந்தித்த முதல் மற்றும் கடைசி அதிபர் - சாவேஸ்...!

உலகெங்கும் இடது சிந்தனைகளை ஏற்கும்...புரட்சியை ஏற்கும் அனைவருக்கும் மிகப்பெரும் பின்னடைவுதான் சாவேஸ் மரணம்...!

அமெரிக்காவிற்கு மிகப்பெரும் மகிழ்ச்சி தான் சாவேஸ் மரணம்...!

இனி வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடுவார்கள் அமேரிக்கா நாட்டினர்...!

முதலில் அமெரிக்க அரசு வெனிசுலாவைத் தான் குறி வைத்தது..அதன் அளப்பரிய எண்ணெய் வளத்திற்காக...சாவேஸ் பெரும் தடையாக இருக்கவே...ஒரு இரண்டு ஆண்டு காலம் மிகச் சரியாக திட்டம் தீட்டி சதாம் உசேன் Mass Destruction Weapons ( MDW ) வைத்திருப்பதாக பெரும் கூப்பாடு போட்டு...உலகையே ஆமாம் போடவைத்து ஈராக் நாட்டில் போய் இறங்குவதற்கு முன் பொருளாதார தடை விதித்து...குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்துகளை தடை விதித்து...அதன் மூலம் சுமார் இரண்டு லட்சம் குழந்திகள் மருந்து இல்லாமல் இறந்தனர்...பின்னர் தான் அனைவருக்கும் தெரியுமே...சந்து பொந்துகளில் எல்லாம் தேடியும் ஒரு வெங்காய வெடி கூட கிடைக்காமல்....உலகின் இரண்டாவது எண்ணெய் வளம் நிறைந்த இராக் நாட்டை தனது சொந்த நாடாக மாற்றி இன்றுவரை அங்கிருந்து எடுக்கும் எண்ணைக்கு எந்த கணக்கு வழக்கும் கொடுக்காமல் வெளிப்படையாகவே கொள்ளையடித்துக் கொண்டு போய் தன் நாட்டில் சேமித்து வைத்திருக்கும் அநியாயம் நடந்தன....!

கியூபா...வெனிசுலா..சிலி..பொலிவியா..போன்ற லத்தின் நாடுகளிடம் இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு விசயங்களை கொண்டு சேர்க்க முடியாமல் இருபது நாடுகள் செய்த வேலை தான் இவர்கள் ஓட்டெடுப்பில் இலங்கையை ஆதரித்து ஓட்டு போட்டது...என்றாலும் இவர்களின் தவறை மன்னிக்க முடியாது தான் இலங்கையை ஆதரித்ததனால்....அந்த நாட்டு மக்களுக்கு....வருத்தங்களை தெரிவித்துக் கொள்வோம்...!

அமெரிக்காவினால் இனிமேல் வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளம் தன் கைக்கு கிடைக்க அங்கே எத்துனை லட்சம் மக்கள் கொல்லப்படப் போகிறார்களோ...ஆழ்ந்த இரங்கலை வெனிசுலா நாட்டிற்கு சொல்லிக் கொள்வோம் இரண்டுக்கும் சேர்த்து...

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (6-Mar-13, 4:19 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 188

மேலே