இது தான் அமேரிக்கா மற்றும் டெசோ கொண்டுவரும் புடலங்காய் தீர்மானம்...!

இது தான் அமேரிக்கா மற்றும் டெசோ கொண்டுவரும் புடலங்காய் தீர்மானம்...!

1.
இலங்கையில் அணைத்து மக்களுக்கும் நீதி...சமத்துவம்...நல்லிணக்கம் ஆகிய இந்த மூன்றையும் உறுதிப்படுத்த சட்டரீதியான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

2.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு அதிகாரிகள் குழு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அந்த நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விசயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அல்லது அவருக்கு இணையான பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று அந்த நாட்டுக்கு உதவி செய்ய வேண்டும்.

3.
இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை குழு ஆணையர் அடுத்த ஐ.நா.வின் 25 வது கூட்டத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

அதாவது இந்த மூன்று முக்கிய தீர்மானங்கள் தான் இவை.

1. சட்டரீதியான நடைமுறைகள் தானே...அதுதான் அந்த 13 வது சட்டம் செல்லாது என்று சொல்லிவிட்டார்களே...
2. இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று தானே...சுயமாக இல்லையே...? இவர்களை முதலில் இலங்கைக்கு வரச்சொல்லி விட்டுத்தான் சோறு தண்ணியே குடிக்கப் போவார்கள் மகிந்த குடும்பத்தினர்....
3. அறிக்கை தானே...காசா பணமா...ஒரு ஆயிரம் பக்கத்திற்கு அடித்து கொடுத்து விட்டால் போயிற்று..யாருக்கு நட்டம்...?

இப்படி ஒவ்வொரு வருடமாக மார்ச் மாதத்தில் கூட்டத்தை போட்டு....கீரி பாம்பு சண்டையை போட்டுவிட்டு... அனைவரின் டவுசர்களை கழட்டிக் கொண்டுபோய் விடுவார்கள்...அமெரிக்காவின் பின்னே நிற்பவர்கள்.இவற்றை இல்லையென்று மறுக்க முடியுமா யாராலும்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (6-Mar-13, 4:57 pm)
பார்வை : 197

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே