முடிந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்....

உலகின் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்தாலும் கண்டன குரல் எழுப்பும் ஆதிக்கம் மிக்க என் ஆணினமே... முடிந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்....

1. உலகம் முழுக்க பரவியிருக்கிற உங்களின் சமத்துவ பார்வை ஏன் உங்கள் வீட்டுக்குள் நுழைவதில்லை?

2. உங்களின் தாயை தந்தை திட்டும் போதும் வரும் கோபம் உங்கள் தங்கையை திட்டும் போது மட்டும் ஏன் வர மறுக்கிறது?

3. உங்களை போலவே கிட்டத்தட்ட சமவிகிதத்தில், சமமான எலும்புகளோடு, சமமான எடையோடு பிறக்கின்ற ஒரு உயிர், சில உடல் கூறுகளினால் பெண்ணாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக தாழ்வாக நடத்தப்படுவது எவ்வகையில் நியாயம்?

4. உங்களுக்கான சுதந்திரம் எல்லைகளற்றது எனில் அவர்களுக்கும் அப்படித்தானே...?

5. அவர்களின் உடல் பலவீனத்தை உங்களின் பலமாக எப்படி கருதுகிறீர்கள்....?

6. சுதந்திரம் கொடுக்கிற பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போவதாய் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் என்னுடைய கேள்வி - ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போவதில்லையே... ஒரு ஆணும் தானே உடன் செல்கிறான். இதில் எப்படி பெண்களை மட்டும் குற்றவாளி ஆக்குகிறீர்கள்....?

7. பெண்கள் சமூகத்தில் வளரத்தொடங்கிய பிறகு உங்களின் சுதந்திரம் பறிபோனதாய் புலம்புவோரே... அவர்களின் சுதந்திரத்தை அவர்கள் எடுத்துக்கொள்வது உங்களுக்கு எப்படி இழப்பாக அமையும்?

8. எல்லா பெண்களும் கெட்டவர்கள் எனில் ஏன் அவர்களை திருமணம் செய்துகொள்கிறீர்கள்?

9. அப்படியே உங்கள் மனைவி மட்டும் நல்லவர் எனில், மற்றவர்களின் பார்வையில் அவரவர்களின் மனைவிகளும் நல்லவர்கள் தானே...?

10. தவறுகள் யார் செய்தாலும் தவறு தானே... இதில் ஆண்-பெண் என்கிற பேதம் எப்படி வருகிறது?

இப்படி எண்ணற்ற கேள்விகள்...

தன் உடல் வலிமையை அடுத்தவர்களை வீழ்த்த பயன்படுத்துபவன் தோற்றவனே.... என்கிறது ஒரு மேலைநாட்டு பழமொழி. உங்களின் உடல் வலிமை அவர்களை காக்கவே அன்றி வீழ்த்த அல்ல.

உங்கள் குடும்ப பெண்களின் எண்ணங்களை வீட்டைத்தாண்டி விரிய வழி விடுங்கள். அவர்களுக்கும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - உங்களை போலவே...!

எழுதியவர் : (6-Mar-13, 9:17 pm)
பார்வை : 214

மேலே