எச்சில் ரணங்கள்.

நிர்வாணம் குறித்த
இயற்கையின் முதல் அங்கீகாரமென
வானத்து மேகங்கள்
முழு நிலவின்
துயில் கலைக்கிறது.

ஈரம் உமிழும் சிற்றோடைக் கரைகளில்
காமம் முழுவதும் தணிந்த
ஆதாமின் பாதப் பதிவுகள்.
பரிமாறிய முத்த்ங்களின்
உலராத எச்சில் ஈரங்கள்
ரணங்களாக மாற
எவாளின் கண்களில் தெரிகிறது
ஏடன் தோட்ட்த்துக் கனி.

எழுதியவர் : பிரேம பிரபா (7-Mar-13, 3:24 pm)
பார்வை : 164

மேலே