சொல்லத்தான் நீநினைத்தாய் சொல்லாமல் நீசென்றாய்
சொல்லத்தான் நீநினைத்தாய் சொல்லாமல் நீசென்றாய்
சொல்லிலாத மௌனத்தின் சொந்தமான உன்னிதழ்கள்
சொல்லித்தான் ஆகவேண்டும் சொல்லவில்லை யாருமிங்கே
சொல்தோற்கும் மௌனத்தில் தான்காத லின்வெற்றி
---காய் காய் காய் காய் என்ற ஒரே வாய்ப்பாடு
அடிதோறும் அமைந்த கலிவிருத்தம்
அடி எதுகை--- சொல் சொல் சொல் சொல்
சீர் மோனை 1 3 ஆம் சீரில் சொ சொ சொ சொ சொ சொ சொ தா
சொல்லத்தான் நீநினைத்தாய் சொல்லாமல் நீசென்றாய்
சொல்லிலாத மௌனத்தின் சொந்தமான உன்னிதழ்கள்
சொல்லித்தான் ஆகவேண்டும் சொன்னார்யார் காதலில்
சொல்தோற்கும் மௌனமேவெல் லும்
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக