செந்நீராகலாமா காவிரிநீர்...?
காட்டில் தவழ்ந்து மலையின் உச்சிதொட்டு
விழுந்து ஓடமுடியாமல் ஓய்வுற்று
ரிதமுடன் சிரித்துக் கொண்டிருக்கின்றாயா?
இல்லை
காட்டுமிராண்டிகளின் கூட்டுக்குள்
விழியில் மல்கும் நீராய் அடைபட்டு
ரிதத்தோடு அழுகின்றாயா?
காவலில் அடைக்கப்பட்டோமென்று
விரிசல் கிடைக்காதோவென
ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கிறாயா?
இல்லை
உன்மீதுள்ள பேராசையால் மனிதர்களைச்
சாய்க்கும் முடர்களை எண்ணி
செந்நீர் விட்டுக்கொண்டிருக்கிறாயா?
எதுவானாலும் சரி
உனக்கேன் வேலி
இயற்கையாய் பிறந்த நீ...
செயற்கை அணை தகர்த்து
என் நாட்டையும் வளப்படுத்த வா...!
நாங்களும் அந்நாட்டின் சகோதரர்கள் அல்லவா...