பெண்ணின் பெருமை
வலியால் துடிக்கும் பெண்மை திங்கள்தோறும்
அவளின் வலியை புரிந்தால்நன்மை மனதோரம்
மங்கையாய் பிறந்த பாவமா சாபமா
மனதாலும் உடலாலும் நொந்து தொலைவதற்கு
வலியின் விளிம்பில் நிர்கதியாய் நின்றாய்
உன்வலியின் வலிஅறியா நானுமொரு பிண்டமடி
பொறுத்திரு சற்றுநேரம் தீர்ந்திடும் உச்சபாரம்
ஆறுதல் வரிகளை கவிதையில் அமைத்திடுவேன்
ஒவ்வொரு திங்களிலும் அடையும் வேதனை
வேதனை அல்ல பெண்மையின் சாதனை
தாங்காத பாரமதை பெண்ணிற்கு தருவதேன்
கடவுளிடம் முறையிட்டு கேட்குமொரு கவிஞன்
பரமென்று கூறியதை கடிந்து கொள்ளாதே
தாய்மையின் அடையாளமிதை வெறுத்து செல்லாதே
கடவுளின் விளக்கமது சிறப்பிக்கும் தாய்மையை
பொறுத்திரு மகளே உன்வலி தீரும்ஒருநாள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
