மானுட விலங்கின் கோரப்பற்கள்
செங்கல் சுமக்க
கற்றுக் கொண்டன
குட்டிச்சுவர் தொலைத்த
கழுதைகள் .
................................................
வழித்தடங்களுடன்
வாழ்க்கையைதொலைத்து
கேள்விகளுடனான
களிறின் பிளறல் .
........................................................
வெம்மையுலகின்
அனல்வெளிகளால்
பனிக்கட்டிகளுடன் உருகும்
பாண்டா கரடியின்
ஆயுட்காலம் .
...........................................................
அலைபேசியின்
அலைக்கற்றைகளில்
சிட்டுக்குருவியின்
கடைசி சுவாசம் ...
.............................................................
இயற்கை சுரண்டலில்
இரக்கம் தொலைத்த
இழி விலங்கின்
உயிர் துரோகங்கள் ....
..................................................................
மானுட சிரிப்புகளின்
கோரப்பற்களில்
குருதியின் வாடைகள் .