புதிர் ...
உனக்கான உயிர் எங்கோ துடிக்கும் நேரத்தில் ,
என் உயிரை பறித்துக் கொண்டு தர மறுக்கிறாய்...
உயிர் இல்லா உடலாக மாற்றிவிட்டு ஏதோ சொல்கிறாய் நீ என் உயிர் என்று ...
நியாயம் தானா ???
காதலித்து விட்ட என்னை குற்றம் சொல்வதா - இல்லை
கள்வனாய் மாறிவிட்ட உன்னை குறை கூறுவதா ?
பாதை மாறிவிட்டு தவிக்கின்றேன்
எனக்கே புதிராய் மாறிவிட்ட என் வாழ்வில் !!!