[434]...துளிப்பாக்கள்..(11-03-13)

கத்தியின்றி
ரத்தமின்றி
வந்ததாலோ
சுதந்திரம்
கதராடை போலாச்சு!
***********************************
எங்கோ இருந்த
காத்தாடிகள்
பழுதடைந்தன..
இங்கே வீசிக்கொண்டிருக்கிறோம்
நா விசிறிகளால்
ஒருவர் புழுக்கத்தை
மற்றொருவர் மேல்!
*******************************************
எல்லாச் செலவுகளும் செய்து
அடிபம்புகளைப்
போட்டுவிட்டோம்..
வீதிக்கு வீதி..
அவைகளும் நின்றுகொண்டிருக்கின்றன
எங்கள் 'பிரதிநிதிகளைப்' போல..
**********************************************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (11-Mar-13, 8:29 pm)
பார்வை : 110

மேலே