மூங்கில் இசை...

சந்தனத்தை பூசித்தான்
மணத்தை நுகரவேண்டும்
சாமார்த்தியமாக பேசித்தான்
சாதனைகளை பெறவேண்டும்
விட்டில் பூச்சியாக
வீட்டில் அடங்காதே
மின்மினிபூச்சியாக
விண்ணில் வலம் வா !
மீட்டுக்கொண்ட ராகங்களை
இனிய இசையாக
இசைத்திட இன்றே
முயற்சி செய் ! மூச்சு காற்றையும்
மூங்கில் இசையாக
சுக ராகம் பாட
சூத்திரமாக மாறிவிடு !

எழுதியவர் : (12-Mar-13, 10:43 am)
சேர்த்தது : paptamil
பார்வை : 94

மேலே