சம போதை மச்சி

உனை பார்த்து
சோலை பூக்கள்
இதழ்கள் மலர்ந்து பாடும்!

உனை வரவேற்று
பறவைகள் சிறகுகள்
விரித்து உற்ச்சாக
சிறகோஷம் எழுப்பும்!

உன் மனம்
லயிக்க மரங்கள்
அசைந்து ஆடியபடி
கிளைகளால் அதிலுள்ள
இலைகளால் அற்புதமாய்
பின்னணி இசை
அமைக்கும்!

நீ ஈன்றெடுத்த
முத்துக்கள் புள்ளிமான்களாய்
துள்ளி துள்ளி
உனை அகலாது
சற்றே தள்ளி
உனைச்சுற்றி சுற்றி
ஓடி விளையாடிக்கொண்டு
இருக்கும்!

உன்னவளோ உன்
விரல்களோடு விரல்கள்
கோர்த்து உன்
தோளோடு தலை
சாய்த்து உனை
துணையாய் கொண்ட
பெரு மகிழ்வில்
உலகை ரசிப்பாள்

ஆமாம் இதற்கு
நான் என்ன
செய்ய வேண்டும்?
என கேட்பது
புரிகிறது எனக்கு!

அழகாய்,வடிவாய்
உண்டியல் ஒன்றை
தேடித்தேடி தேர்ந்தெடுத்து
இன்றே வாங்கு

அதில் நீ
பார்க்க உன்னவர்களுக்கு
காண்பிக்க விருப்பமுள்ள
இடத்தை தேர்வுசெய்து
அழகாய் எழுது

தினமும் நீ
மது அருந்த
செலவழிக்கும் பெரிய
நோட்டுகளையும் புகைக்க
செலவழிக்கும் சில்லறைகளையும்
போடு

அவ்வளவுதான்
அவ்வளவே தான்
மிகவும் எளிது

நாட்கள் நகரும்
வருடம் முடியும்
பிள்ளைகள் பள்ளி
விடுமுறையில் சோர்ந்து
இருப்பர் துணைவியோ
தினசரி வாழ்க்கையில்
உனக்காய் போராடி
போராடி சற்றே
கலைத்து இருப்பால்
நீயும் தான்

இப்பொழுது உன்
பிள்ளைகளையும் மனைவியையும்
அன்பாய் அழை
மனைவியை உண்டியலை
உடைக்க சொல்
சிதறும் சில்லறைகளை
உன் வாண்டுகளை
விட்டு எண்ணச்சொல்

சற்று தள்ளி
அமர்ந்து அவர்களின்
விழிகளில் தெரியும்
பரவசத்தை ரசி

உன்னுள் இருக்கும்
ஆன்மாவிற்கு சுயநினைவில்
இப்பொழுது ஏறும்
போதை உலகில்
நீ எப்பொழுதும்
கொடுத்ததில்லை
உலகில் வேறெங்கும்
இப்போதைக்கு கிளைகளும்
இல்லை என்பதை
நீயே உணர்வாய்

சரி சரி
நேரம் நகர்ந்து
கொண்டு இருக்கிறது
நீ நிர்ணயத்த
இலக்கை நோக்கி
உன்னவர்களோடு புறப்படு
பயணப்படு,பறந்து செல்!

அங்கே
பூத்து குலுங்கி பூக்களும்
ஆர்வமோடு பறவைகளும்
பசுமையாய் இசைமீட்க மரங்களும்
காத்து கிடக்கின்றன
உங்கள் நல்வரவுக்காய்...............,

செல் சென்று உனது
வாழ்க்கையை புதுபித்து கொள்!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (12-Mar-13, 1:18 pm)
பார்வை : 114

மேலே