விவாகரத்து விடுதலையடையுமா ???
மஞ்சள் பூசி மணமணக்க
மண்டபத்தில் மன்னவனும் மன்னவளும்
விடிந்தால் கைகோர்க்க
கைகள் பூக்களாய் பூத்திருக்க
காலையில் சேவல்கள் சோம்பேரியாக
கொக்கரிக்கும் முன்னே மேளதாளங்கள்
ஏங்குபவனாய் வெளிப்படுத்தாமல்
வெட்கத்தை மறைத்து
வேடிக்கை பார்ப்பான்
வெட்கத்தோடு வரும் மனப்பெண்ணை
பூரிப்போடு பூப்பரிக்க
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
தலையை சுற்ற
நிகழாத அது ஒரு தருணம்
பதற்றமான நெஞ்சு
பதறவைக்கும் மனசு பிஞ்சு
மஞ்ச கயிறு முறைக்க
முறைமகளுக்கே அதை கொடுக்க
முடிச்சுகள் மூன்றாய்
முடிந்தது முறையில்லா தனித்துவம்
கொஞ்சல்களும் குழையல்களும்
கொஞ்சம் என்பதில்லை
பிஞ்சுகளின் நெஞ்சுகளுக்கு
தஞ்சமாய் தரித்தான்
தன் பிள்ளையென
தான் அப்பாயென
தனக்கே ஆச்சரியமானவனான்
தன் தாரிகையோடு
காலமும் வேகமாய்
கிடுகிடுவென கடந்ததே
காதலும் மறைந்ததே
உள்ளிருக்கும் உன்மைகளை
உணராமல் உள்ளங்கள்
சண்டைகள் போடுதே
சந்தேகங்களை கூட்டுதே
சிறு தவறு பெரிதானதென்ன
சரிகளே தவறானதென்ன
புரியாத அவளுக்கு
புரிய வைக்க துடித்தான்
புரிய மறுத்த அவளால்
புரியாதவனாய் துடித்தான்
தேணீக்களை சீண்டுபவன்
தேணீயாக முடியுமா
தேனீன் அருமை தான்
தேணீக்கு தான் தெரியுமா
பாலம் இரண்டாய் உடைந்ததே
பார்த்த நெஞ்சு பதறுதே
பாவமாய் பிஞ்சு ஒன்னு
அங்கும் இங்கும் ஊஞ்சலாடுதே
உரிச்சவர்களுக்கு உரிமை கேட்குதே
பச்சப்புள்ள பாவப்புள்ள
பட்டினியா கிடக்குது
பத்து மாசம் சுமந்தப்புள்ள
பாசத்த பங்கு போடுது
ஊர் ஊரா நியாயம் போக
ஒன்னு இல்லா விசயத்துக்கு
ஊர்வலம் போக
விடுதலையை விரும்ப
விடுவிக்க மனம் கேட்க
விவாகரத்து கை கொடுக்க
விவாகரத்துக்கு யாரு
விடுதலை கொடுக்க ?????