திருமண வாழ்த்து

என்
மார்பில் சாய்ந்து
மடியில் புதைந்து
என் சுமையை சுமந்து
துன்பம் துரத்தி
இன்பம் தந்து
உறவில் இணைந்து
உயிரில் கலந்தவளே!

எப்படியும் வாழலாம் - என்று
இருந்த என்னை
இப்படித்தான் வாழ வேண்டுமென்று
என் சிந்தையை செதுக்கி
உருவம் தந்த சிற்பியே.,

அதற்க்கு.,
நான் உனக்கு தந்த
துன்ப பரிசுகள்
எண்ணிலடங்கா- அதை
சொல்லி மாளாது.,
சொல்லி எழுத இக்காகிதம்
போதாது.,
இருந்தும்.,
சொல்கிறேன் நான்
ஓரிரு வரிகளில்.,

கணவன் என்று கூறி
கட்டாயப்படுத்தி
உரிமை என்று கூறி
உறவினர் வீட்டுக்கு சென்று வர
காலம் குறித்து கொடுத்தது
அவற்றுள் சில.,

அன்று போல் தான் இன்றும்
காதலிக்கறேன் உன்னை நான்.,
அதிகாரபடுத்துவது மட்டும்
காதல் இல்லை.,
அடிமை படுவதும் காதல் தான்
என்பதை உணர்ந்து விட்டேன்
]இன்றும் என்றும்
அடிமைப்பட நினைக்கிறேன் - உன்
பெண்மையிடம் மட்டும் நான்.,

உன்,
பிரிவு சுமை என் அனைத்தையும்
சோர்வாக்கிவிட்டது,
உன் மீது உள்ள காதல் மட்டும்
இன்றும் எழுந்து நிற்கிறது
கம்பீரமாய்.,
இனி ஓர் பிரிவு வேண்டாம்
நமக்குள்,
இப்பிறவியிலும் , எப்பிறவியிலும்.,

நீ கூறும்,
கடுகளவு பொய் கூட
மலையளவு தெரிந்த எனக்கு,
பொய் கூட காதலுக்கு
அழகுதான் - என்று
ஓர் கவிஞன் கூற, அதை கேட்டு
நீ கூறும் பொய்களை கூட
ரசிக்க கற்றேன் நான்.,
ஆஹா.,
என்ன அழகாக என் மனைவி
பொய் உரைக்கிறாள் என்று.,
நாம்
மணமேடையில் மணம்
முடிக்காவிட்டாலும் - ஆண்டு
மூன்று முடிந்து,
நான்கில் கால் பதிக்கிறது
நம் திருமணம்.,

நானும் ஆராய்ந்தேன்,
என் மனைவி உன்னை போல்.,
யாரும் இல்லை இப்புவியில்.,

இதுவரை.,
இன்பம் களைந்து துன்பத்தை
மட்டுமே உடுத்திய - என்
சுவாச காற்றே.,
இனியாவது
நான் இருக்கும்(இறக்கும்) வரை - நீ
இன்பத்தை மட்டுமே உடுத்த
ஆசைபடுகிறேன் நான்.,
இனி இருவரும் இணைந்து - நம்
சோதனைகளை
சாதனையாக்கி ஒன்றாய் வாழ்வோம்
ஒரு நொடியும் பிரியாமல்.,

எழுதியவர் : திருவருண் (12-Mar-13, 5:47 pm)
Tanglish : thirumana vaazthu
பார்வை : 9685

மேலே