ஒன்றுதிரள்வோம்....
மதி கெட்டதோ தமிழா மனம் மாறியதோ ...
மறந்து விட்டாயோ மங்கையர் பலர் மாரருக்க பட்டதை
உயிருறுப்பின் உள்விட்டு கொன்றனர் பலரை தடிகளால்
ஆசன வாயில் கண்ணாடி உடைத்து ஆண்களை கொன்றனர்
கர்ப்பிணி என்றும் பாராமல் கண்மூடி தாக்கினர்
பச்சிளம் என்றும் பாராமல் பாவிகள் கொன்று குவித்தனர்
எத்தனை இழப்புகள் ஏற்பினும் எஞ்சிய உயிரை வைத்து
எதிரி ஒருவனது தலையாவது கொய்ய
வீர தமிழன் அவன் மாரேந்தி குண்டேற்றான்
அரக்கன் அவன் ஆயிரம் கொன்ற பின்னும்
ஆற வில்லையோ பசி அவனுக்கு
கொடுமை செய்து கொலை செய்தவன் குற்றமற்றவனில்லை
உறவு என்று உதவ மனமின்றி போயினும்
மனிதனென்று மனம் மாறியிருக்கலமே
மறந்து விட்டாயே ... மறுத்துவிட்டாய்.....
மறந்தது போதும் ...மறந்தது போதும் ..
மறத்தமிழன் நாமென்று காட்ட
குலத்தையே அழித்த குற்றவாளியை
குதறி கொள்ளத்தான் மனமில்லை
கூண்டிலவது நிறுத்த வேண்டாமா
உலகமே ஒன்றென திரண்ட போதும்
உயர் தமிழா மானம் கெட்டவனோ
மாறவில்லையே மனம் சிறிதேனும்
ஒன்றுதிரள்வோம் எதிரியை அளிக்க அல்ல
உண்மையை உயர் நிறுத்த ....