பக்கமே துக்கமோ! தூரமே இன்பமோ!
பழக நினைத்தா
பக்கத்தில் வந்தோம்!
பகவான் நினைத்தான்
பக்கத்தில் வந்தோம்!
முதலில் மெல்ல சிரித்து
நட்பை விதைக்க
நட்பை வளர்க்க
நாளும் உழைக்க
கோபக் களை ஏன்
வீணாய் முளைக்க?
வேக மெடுத்து
நட் பூவை அழிக்க
இது தான் சரியோ!
பழகும் முறையோ!
இணைத்த இறையை
மதிக்கும் அழகோ!
பக்கத்தில் வந்ததால்
துக்கத்தை தந்தால்
தூரமே போதுமே!
சோகமே தீருமே!

