.."கண்ணா வருவாயா..."
நீ கண்ணன் தான்....
ஆயர்பாடி கண்ணன் இல்லை...
இந்த மீராவுக்கேற்ற கண்ணன்....!
அகப்பக்கத்தில் கோபுரமாக
வீற்றிருக்கும் உனக்காக
முகப்பக்கத்தில்
கொலுவைத்துள்ளேன்.....
உலகின் எந்த மூலையில்
நீ இருந்தாலும்....
இந்தக் கவிதைக் கொலு
உன் விழியில் விழுந்து...
இதயம் நுழைந்து.....
கருத்தில் பதிந்து....
எண்ணங்களில் ஊடுருவினால்......
என்னைக் காண கூட
வரவேண்டாம்........
காதலாக ஒரு வார்த்தையாவது
பதிந்து விடு...
அல்லது
காற்றிலாவது தூது அனுப்பு....
...காத்திருந்தேன்....
...காத்திருக்கின்றேன்...
...காத்திருப்பேன்....
............!!!!!.................

