உன்னை நானே நீக்கிவிட்டேன்
பெண்ணே....
என்னைவிட்டு உன்னை, நானே நீக்கிவிட்டேன்
நித்தமும் உன்னால் நான் அழிந்ததை
உனக்கு என்னால் விளக்கத் தெரியாமல் போனதும்
காரணமோ.....?
அல்லது எனக்கு பிடிக்காததை, நீ பிடித்துக்கொண்டதால்
ஏற்பட்ட சலிப்போ தெரியவில்லை, உன்னை என் உயிராய் நேசித்த என் நேசத்தில் குறை இல்லை,ஆனால் இன்று........?
தெளிந்த தடாகத்தில் கல்லெறிந்து சுற்றும் அலைகள் போல
இன்றும் உன் நினைவுகள் என்னை விட்டு அகலாமல் சுற்றிவந்து கொல்லும் வேதனையை எப்படி சொல்வேன் !